ஆண்டிபட்டியில் இடிந்து சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மேல் அமைக்கப்பட்ட சிறு பாலம் இதுவரை சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் 12 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள சீனிவாசா நகர் தெருக்களில் குறுக்கிடும் கழிவுநீர் கால்வாய் மேல் சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், இந்த சிறு பாலங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பே இடிந்து சேதமடைந்துவிட்டன. இதனால், தெருவின் நடுவில் பெரிய கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் சென்று வர முடியாமல் சிக்கிக் கொள்கின்றன. இரவில், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாக உள்ளது.
எனவே, இந்த பாலத்தினை சீரமைக்க வேண்டும் என்று, இப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, நெருக்கமான குடியிருப்புகளைக் கொண்ட சீனிவாசா நகரில் சேதமடைந்துள்ள இந்த சிறு பாலங்களை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

Ban NEET! Ban NEET! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்!
உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

பின்னாளில் அழாதீர்கள்! அகிலேஷ் யாதவை கூட்டணிக்கு அழைத்த ஓவைசி!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET


