மதுக் கூடத்தில் பணம் திருட்டு
தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக் கூடத்தில் ரூ.7ஆயிரம் மற்றும் பொருள்கள் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக் கூடத்தில் ரூ.7ஆயிரம் மற்றும் பொருள்கள் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி, விஸ்வதாஸ் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர், தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே மதுக் கடையுடன் இணைந்த மதுக் கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மர்ம நபர் மதுக்கூடத்துக்குள் நுழைந்து, மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம், மின் உபகரணம் மற்றும் சிகரெட் பாக்கெட்களை திருடிச் சென்று விட்டதாக தேனி காவல் நிலையத்தில் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...