ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

போடி அருகே தூக்கில் தொங்கிய தொழிலாளியின் சடலம் மீட்பு

போடி அருகே வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On :29 மார்ச் 2018, 7:56 pm

போடி அருகே வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே கரட்டுப்பட்டி செல்லும் சாலையில் மணி என்பவருக்கு சொந்தான தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் 
அப்துல் ரஹீம் தலைமையில் போலீஸார் அங்கு சென்று பார்த்தனர்.
 சடலத்தை கைப்பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது, போடி மதுரை வீரன் தெருவை சேர்ந்த பால்பாண்டி (37) என்பதும், இவர் தேங்காய் உறிக்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தூக்கிலிடப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன பால்பாண்டிக்கு 15 வருடம் முன் திருமணமான நிலையில், 5 வருடத்திற்கு முன் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டாராம். இந்நிலையில்தான் பால்பாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.