தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம், மர்ம நபர் நகையை பறித்துச் சென்றுள்ளார்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தெருவைச் சேர்ந்த தவம் என்பவரின் மனைவி ஜெயசுதா (46). இவர் சம்பவத்தன்று தனது உறவினர் ஜெயலட்சுமியுடன் வீட்டின் முன்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இவரது மகன்கள் விசாகன், விக்னேஷ் ஆகியோர் வீட்டில் அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, வீட்டின் பின்புறக் கதவை கம்பியால் நெம்பி திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர், ஜெயசுதா அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துள்ளார். அப்போது விழித்துக்கொண்ட ஜெயசுதா, சங்கிலியை பற்றிக்கொண்டு கூச்சலிட்டாராம். இதில் சங்கிலி அறுந்து சுமார் 8 பவுன் எடையுள்ள சங்கிலி மர்ம நபரின் கைக்குச் சென்றுவிட்டதால், ஜெயசுதாவும், ஜெயலட்சுமியும் அந்த நபரைப் பிடிக்க முயன்றனர். ஆனால், கால் சட்டை மட்டும் அணிந்து முகத்தை துணியால் மூடியிருந்த மர்ம நபர் சங்கிலியுடன் தப்பி ஓடி விட்டாராம்.
இது குறித்து ஜெயசுதா அளித்த புகாரின்பேரில், தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கு: சார் - பதிவாளருக்கு முன்ஜாமின்!

நடிகை சமந்தாவுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு!

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

கூடங்குளம் தரவுகள் கசிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: மாணிக்கம் தாகூர்
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


