தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

வைகை அணை நீர்மட்டம் 60.63 அடியாக உயர்வு

வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை அணை யின் நீர்மட்டம் 60.63 அடியாக உயர்ந்திருந்தது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:46 am IST

வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை அணை யின் நீர்மட்டம் 60.63 அடியாக உயர்ந்திருந்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த செப்.30 ஆம் தேதி முதல் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,600 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து 60.63 அடியாக உள்ளது (அணை உயரம் 71 அடி).
அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 3,159 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 3,692 மில்லியன் கன அடி. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு விநாடிக்கு 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 132.80 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 3,025 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 5,352 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.