வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

உத்தமபாளையம் கல்லூரியில் சர்வதேச கணிதவியல் மாநாடு

தேனி மாவட்டம் உத்தமபாளையம்  ஹாஜி கருத்த  ராவுத்தர் ஹவுதியா  கல்லூரியில் சர்வதேச கணிதவியல் மாநாடு  திங்கள்கிழமை நடைபெற்றது.

Published On :

தேனி மாவட்டம் உத்தமபாளையம்  ஹாஜி கருத்த  ராவுத்தர் ஹவுதியா  கல்லூரியில் சர்வதேச கணிதவியல் மாநாடு  திங்கள்கிழமை நடைபெற்றது.
  கணிதத்தில் நவீன போக்குகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு,  கல்லூரி முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்து துவக்க உரையாற்றினார். இதில், முனைவர் முகமது ஷெரீப் தொகுத்த  "ஸ்பெசல் இஸ்யூ  ஆன் அல்ஜீப்ரா அண்ட் அப்ளைடு மேதமெட்டிக்ஸ்' என்ற புத்தகத்தை  கல்லூரிச் செயலரும் தாளாளர் தர்வேஷ் முகைதீன் வெளியிட்டார்.
 இம்மாநாட்டில் சிறப்பு விருந்திராக  இலங்கையை சேர்ந்த இன்ஸ்டியூட் ஆப் மேனேஞ்மென்ட்  அண்ட் மேதமெட்டிக்ஸின் பேராசிரியர் சாமந்தி கோனரசிங்கே, திருச்சி ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் நகூர் கனி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்லூரி  பேராசிரியர்  ஆசிர் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினர்.
மாநாட்டில், ஷெரீப் யுனிவர்சிட்டி  ஆப்  டெக்னாலஜியுடன் புரிந்துணர்வு  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. போடி சி.பி.ஏ. கல்லூரி  பேராசிரியர்கள் இளங்கோ, கிருஷ்ணன், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியர் லாரன்ஸ் ரொசாரியே ராஜ், மேலூர் அரசுக்கல்லூரி பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர் சேர் பெர்சனாக செயலாற்றினர்.    கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆராய்ச்சியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் என 200-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  கல்லூரியின் கணிதத்துறை தலைவர் முகமது ஷெரீப் வரவேற்றார். பேராசிரியர் ரெக்னா சல்மா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.