தேனி அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த இந்து எழுச்சி முன்னணி கிளைச் செயலர் தனலட்சுமி மற்றும் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
நகராட்சிக்கு உள்பட்ட 12-ஆவது வார்டில் வெங்கலா நகர் பகுதியில் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. இப் பகுதியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.
கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெகுதொலைவு சென்று தலைச்சுமையாக தண்ணீர் கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெங்கலா நகர் பகுதியில் குடிநீர்த் தடுப்பாட்டை நிரந்தரமாக தீர்ப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது: டிரம்ப்
தமிழ்நாடு பேரவைத் தலைவராகிறார் ஜே.சி.டி. பிரபாகர்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்வு: தங்கம்?
நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
