ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பெண்ணிடம் திருட முயற்சி:  மற்றொரு பெண் கைது

தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை  பெண்ணிடம் பணப் பையை பறித்துக்கொண்டு

Updated On :25 பிப்ரவரி 2019, 7:37 am IST

தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை  பெண்ணிடம் பணப் பையை பறித்துக்கொண்டு, தப்பிச்  செல்ல முயன்ற மற்றொரு பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் வண்டன்மேட்டைச் சேர்ந்த ஏலத்தோட்ட தொழிலாளி சித்ரா (38). இவர் சனிக்கிழமை கம்பம் வந்தார். சின்னமனூர் ஒன்றியம் பூசாரி கவுண்டன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக, அவர்  கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, சித்ரா அருகே நின்ற மற்றொரு பெண் ஒருவர் பேச்சு கொடுத்தார். அந்த பெண் திடீரென  சித்ராவின் பையை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றார். உடனே  சித்ரா சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் கூடி, பையைத் திருடிச் செல்ல முன்ற பெண்ணை பிடித்தனர். பின்னர் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் அந்த பெண் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில்,  கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன் பட்டியைச் சேர்ந்த விஜயா (40) என்பது தெரிய வந்தது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.