இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

மாநில அளவிலான கோ-கோ போட்டி: தேனி மகளிர் அணி முதலிடம்

ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

Updated On :26 பிப்ரவரி 2019, 2:10 am IST

ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ போட்டியில் தேனி மகளிர் அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினர்.
ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் தேனி மாவட்ட கோ - கோ கழகம், லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளி சார்பில் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் கோ-கோ போட்டிகள் கடந்த 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 20-க்கு மேற்பட்ட பெண்கள் அணிகள் கலந்து கொண்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் தேனி அணி முதலிடத்தையும், சென்னை அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது. முதலிடம் பெற்ற தேனி மகளிர் அணிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரிசுகள் மற்றும் கோப்பையை வழங்கினார்.
இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பரிசுகள் மற்றும் கோப்பையை வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பெருந்தலைவர் ஓ.ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ரோஸி வித்யாலயா பள்ளி நிர்வாக இயக்குநர் ரா.முத்துகுகன் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.