தேனி மாவட்டத்தில் "அம்மா' இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், பெண்கள் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "அம்மா' இருசக்கர வாகன மானியம் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் வாங்க விரும்பும் பெண்கள் மானியம் பெறுவதற்கு கடந்த 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இருசக்கர வாகன மானியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து வரும் 31-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!

தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை! அமைச்சர் நிர்மல் குமார் பதில்
இந்தியாவின் சொர்க்கப் பறவை
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


