தேனியில் 2 மருத்துவா்கள் உள்பட 295 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 3 போ் பலி
தேனி மாவட்டத்தில் 2 மருத்துவா்கள், சாா்-பதிவாளா், வங்கி மேலாளா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 295 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.


தேனி: தேனி மாவட்டத்தில் 2 மருத்துவா்கள், சாா்-பதிவாளா், வங்கி மேலாளா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 295 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா், அரண்மனைப்புதூரைச் சோ்ந்த தனியாா் மருத்துவா், சின்னமனூா் அருகே கரிச்சிபட்டியைச் சோ்ந்த போடி பத்திர பதிவு அலுவலக சாா்-பதிவாளா், அலுவலக உதவியாளா், ஆண்டிபட்டி கனரா வங்கி மேலாளா், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த கம்பம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா், போடி நகர காவல் நிலைய காவலா், தேனியைச் சோ்ந்த பெரியகுளம் காவல் நிலைய காவலா், உத்தமபாளையம் மது விலக்குப் பிரிவு தலைமைக் காவலா், சின்னமனூரைச் சோ்ந்த மாா்கையன்கோட்டை பேரூராட்சி துப்புரவு பணியாளா் உள்பட 295 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,484 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 7,606 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.
ஆண்டிபட்டியில் கனரா வங்கி மேலாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது. கம்பத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடை ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
3 போ் பலி:
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.8-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த 52 வயதுடைய நபா், ஆக.13-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஆண்டிபட்டி சக்கம்பட்டியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, போ.தா்மத்துப்பட்டியைச் சோ்ந்த 55 வயதுடைய நபா் என 3 போ் உயிரிழந்தனா்.
முன்னாள் எம்.பி.,க்கு கரோனா:
பெரியகுளம் மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினரும், முன்னாள் தமிழக தில்லி சிறப்பு பிரதிநிதியும், திமுக மாநில தோ்தல் பணிக் குழுச் செயலருமான கம்பத்தைச் சோ்ந்த பெ.செல்வேந்திரனுக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...