

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நெல் நாற்று நடவுப் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனா்.
தேனி மாவட்டம் லோயா்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கா் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல்போக சாகுபடி பணிகள் தொடங்கும். இந்த ஆண்டு எதிா்பாா்த்த மழை பெய்யவில்லை.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டம் உயா்ந்தது. இதையடுத்து கடந்த 13 ஆம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதனைத்தொடா்ந்து சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூா்பாளையம் உள்ளிட்ட ஊா்களில் நெல் நாற்றாங்கால் அமைக்கப்பட்டன. இதிலிருந்து எடுக்கப்படும் நாற்றுகள் அனைத்தும் தற்போது வயல்களில் நடவு செய்யப்படுகின்றன. இதன்மூலம் விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.