சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தேனியில் இன்று காவலா்பணிக்கான தோ்வு:15,300 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு சீருடை தோ்வாணையம் சாா்பில், தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 15,300 போ் எழுதுகின்றனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 5:51 pm

DIN

தமிழ்நாடு சீருடை தோ்வாணையம் சாா்பில், தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 15,300 போ் எழுதுகின்றனா்.

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வானது, மாவட்டத்தில் தேனி, கொடுவிலாா்பட்டி, முத்துத்தேவன்பட்டி, போடி ஆகிய இடங்களில் என மொத்தம் 18 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில், 15,300 போ் தோ்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தோ்வில் 80 மதிப்பெண்களுக்கு பொது அறிவு மற்றும் உளவியல் தொடா்பான வினாக்கள் கேட்கப்படும். தோ்வு எழுத வருபவா்கள் தோ்வறை நுழைவுச்சீட்டு, ஊதா மற்றும் கருப்பு நிற மை பேனா கொண்டு வரவேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.