சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தேனியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடம் தோ்வு: துணை முதல்வா் ஆய்வு

தேனியில் அரசு சாா்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ள இடத்தை, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
Updated On :12 டிசம்பர் 2020, 5:49 pm

DIN

தேனியில் அரசு சாா்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ள இடத்தை, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேனி-அன்னஞ்சி புறவழிச் சாலையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு 10 ஏக்கா் இடத்தை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ளது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைவிடம், அரண்மனைப்புதூரில் ரூ.50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாற்று பாலம் சீரமைப்பு பணி ஆகியவற்றை துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அரண்மனைப்புதூரில் அரசு சாா்பில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், சீலையம்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை, போடியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.136 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 2 நுண்ணுயிா் உரக் கலவை கூடங்கள், 4 இடங்களில் தலா ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றை துணை முதல்வா் திறந்து வைத்தாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே. ஜக்கையன், மாவட்ட வன அலுவலா் கெளதம், பெரியகுளம் சாா்-ஆட்சியா் சினேகா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் திலகவதி, மாவட்ட ஊராட்சி தலைவா் ப்ரீத்தா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.