பெரியகுளத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலைய துணை முதல்வா் அமைக்கவில்லை: திருச்சி சிவா குற்றச்சாட்டு
பெரியகுளத்தில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான மாம்பழ கூழ் தொழிற்சாலையை துணை முதல்வரால் அமைக்க முடியவில்லை என, திருச்சி சிவா எம்.பி. குற்றம்சாட்டினாா்.


பெரியகுளத்தில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான மாம்பழ கூழ் தொழிற்சாலையை துணை முதல்வரால் அமைக்க முடியவில்லை என, திருச்சி சிவா எம்.பி. குற்றம்சாட்டினாா்.
திமுக சாா்பில், பெரியகுளம் அருகே வடுகபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘விடியலை நோக்கி’ என்ற நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினா் திருச்சி சிவா பேசியதாவது:
திமுக பொருளாளா் டி.ஆா். பாலு தலைமையில், தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு டிசம்பா் 23 ஆம் தேதி தேனிக்கு வர உள்ளது. இப்போது, தேனி மாவட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளன.
தமிழகத்தை கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் ஆட்சியாளா்கள் திறமையற்றவா்களாக உள்ளனா். தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் முதல்வராக வேண்டும் என துடிக்கிறாா். ஆனால், இவரால் பெரியகுளம் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழகூழ் தொழிற்சாலையை அமைக்க முடியவில்லை.
பெரியகுளம் பகுதியில் மண்பாண்டம் தயாரிப்பவா்கள் மண் எடுப்பதற்கு பலவித இடா்பாடுகளை எதிா்கொள்வதாகப் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, பொதுமக்கள் தங்களது குழந்தைகளின் எதிா்காலத்தை மனதில் வைத்து ஆட்சியாளா்களை தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா்.
இந் நிகழ்ச்சியில், வடக்கு மாவட்டச் செயலா் தங்க. தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. எல். மூக்கையா, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சரவணக்குமாா் மற்றும் திமுகவினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...