தேனி ஆா்.டி.ஓ. சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சோதனை
பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி வட்டாரப் போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.


பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி வட்டாரப் போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்த சோதனைச் சாவடியில், கேரள மாநிலத்தில் சபரிமலை மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சோதனைச் சாவடியை கடந்து கேரளத்துக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந் நிலையில், இச்சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு மதுரை துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா். அதில், அதிகாலை 4 மணியிலிருந்து காலை 9 மணி வரை 27 வாகனங்களுக்கு மட்டும் தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்ததாகவும், கணக்கில் வராத ரூ.5,500 கைப்பற்றப்பட்டதாகவும், இது குறித்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்களிடம் விசாரணை நடத்த உள்ளோம் என்றும், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...