சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கம்பத்தில் வேளாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கம்பத்தில் அனைத்து வேளாளர் சங்கங்களின் சார்பில் சனிக்கிழமை, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
கம்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாளர் சங்கத்தினர்.
Updated On :12 டிசம்பர் 2020, 6:49 am

DIN

கம்பத்தில் அனைத்து வேளாளர் சங்கங்களின் சார்பில் சனிக்கிழமை, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பத்தில் வேளாளர் மத்திய சங்கம், ஆதிசக்தி விநாயகர் வேளாளர் சங்கம், கம்பராய பெருமாள் கோயில் வேளாளர் சங்கம், வ.உ.சி வேளாளர் சங்கம் உள்ளிட்ட வேளாளர் சங்கங்களின் சார்பாக கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வ.உ.சி திடலில் தொடங்கி காந்தி சிலை, அரச மரம், வழியாக சிக்னல், போக்குவரத்து சந்திப்பு வரை ஊர்வலமாக வந்தனர். போக்குவரத்து சந்திப்பில் கூட்டமாக நின்று ஆர்பாட்டம் செய்தனர். மத்திய சங்க தலைவர் கே.வி.பி.முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.எஸ்.எஸ். காந்தவாசன் முன்னிலை வகித்தார்.

மாநில வேளாளர் சங்க மகளிரணி தலைவி ஷகிலா கணேசன் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார். வேளாளர், வெள்ளாளர் ஆகிய பெயர்களை தேவேந்திரகுல சமுதாயத்திற்கு தமிழகஅரசு வைக்கக்கூடாது என்றும், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யும் வரையில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் கோஷமிட்டனர்.

மேலும் வேளாளர் சங்கங்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலையும் புறக்கணிப்போம் என்று கோஷமிட்டனர். கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேலான ஆண், பெண்கள் கலந்து கொண்டனர்.  அதிகமான கூட்டத்தால் அரைமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் என்.எஸ். கீதா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.