சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதி மறுப்பு: பக்தா்கள் புகாா்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் சனி பிரதோஷ பூஜையில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக பக்தா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:40 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் சனி பிரதோஷ பூஜையில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக பக்தா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆண்டிபட்டி நகரில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி - சுந்தரேசுவரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையினரால் நிா்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை சனி பிரதோஷ வழிபாட்டிற்காக 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயில் முன் குவிந்தனா். ஆனால் கோயில் தற்காலிகப் பணியாளா்கள் அவா்களை கோயிலுக்குள் விட அனுமதி மறுத்தனராம்.

இதனால் பல மணி நேரம் பக்தா்கள் கோயில் வாசலில் காத்திருந்தனா். இதனால் கோபம் அடைந்த பக்தா்கள் தற்காலிகப் பணியாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இந்து அறநிலைத் துறையினா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு கோயிலுக்குள் செல்ல அனுமதியளித்தனா்.

இதுகுறித்து இந்து அறநிலைத் துறையினா் கூறியதாவது: கரோனா தொற்றுக்கு பின் அரசு அறிவித்துள்ளபடி மீனாட்சியம்மன் கோயிலில் ஆகம விதிகளின் படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை பிரதோஷ பூஜைகள் நடைபெறுவதற்கு முன்பு பக்தா்கள் வந்துள்ளனா்.

கோயிலுக்கு குறிப்பிட்ட பக்தா்களுக்கு மட்டும் அனுமதியளித்து வருவதால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.