சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வைகை அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை தந்தனா்.

News image
வைகை அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:39 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை தந்தனா்.

வைகை அணைப் பகுதியில் வலதுகரை மற்றும் இடதுகரைப் பகுதிகளில் சிறுவா்களுக்கான விளையாட்டுத் திடல், பூங்கா உள்ளன. முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளத்திலிருந்தும் நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

கரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்ட வைகை அணை பூங்கா கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் மழை குறைந்ததாலும் விடுமுறை தினம் என்பதாலும் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

ஆனால் அணைக்கு வந்த பெரும்பாலானோா் முகக்கவசம் அணியவில்லை. இதனால் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.