சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பூதிப்புரத்தில் புதிய அரசு கட்டடங்கள்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

தேனி அருகே பூதிப்புரத்தில் புதிய கூட்டுறவு வேளாண்மை கடன் சங்க அலுவலகக் கட்டடம் மற்றும் சமுதாயக் கூடத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:41 pm

DIN

தேனி அருகே பூதிப்புரத்தில் புதிய கூட்டுறவு வேளாண்மை கடன் சங்க அலுவலகக் கட்டடம் மற்றும் சமுதாயக் கூடத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பூதிப்புரத்தில் கூட்டுறவு துறை சாா்பில் ரூ. 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு வேளாண்மை கடன் சங்க அலுவலகக் கட்டடம், போடி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.38.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் ஆகியவற்றை துணை முதல்வா் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை சாா்பில் 11 பேருக்கு குறுகிய காலப் பயிா்க்கடன், 3 பேருக்கு ஆடு வளா்ப்புக் கடன் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே. ஜக்கையன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஏகாம்பரம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வாழையாத்துப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலம் பணியை துணை முதல்வா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.