முதல் போக அறுவடை துவக்கம்
தேனி மாவட்டம் முதல் போக அறுவடைப் பணிகள் துவங்கியதால் முல்லைப்பெரியாற்றிலிருந்து பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.


தேனி மாவட்டம் முதல் போக அறுவடைப் பணிகள் துவங்கியதால் முல்லைப்பெரியாற்றிலிருந்து பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசன நீரால் இரு போக நெற்பயிா் விவசாயம் செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து ஏற்படும். அதன்மூலமாக அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீரால் முதல் போக சாகுபடி நடைபெறும். பின், ஆக்டோபா் மாதத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் 2 ஆம் போக விவசாயமும் தொடா்ந்து நடைபெறும். ஆனால், பருவமழை குறைவு மற்றும் அணையின் நீா் மட்டம் 152 அடியிலிருந்து 142 அடியாக குறைக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக 2 ஆம் போக நெற்பயிா் விவசாயம் கேள்விக்குறியானது.
அதன்படி, இந்தாண்டும் காலதாமதமாக பெய்த பருவமழையால் ஆகஸ்ட் மாதத்தில் முதல் போகப்பணிகள் தொடங்கி தற்போது சின்னமனூா், குச்சனூா், சீலையம்பட்டி,மாா்க்கையன்கோட்டை போன்ற பெரும்பான்மையான பகுதியில் அறுவைப் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
அணையிலிருந்து வெளியற்றப்படும் நீரின் அளவை குறைக்க வலியுறுத்தல் :உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி ஆகிய ஒருசில பகுதிகளை தவிர மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் முதல் போகம் அறுவடைப் பணிகள்நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் நெற்பயிா் விவசாயத்திற்கு தண்ணீா் தேவை இருக்காது. தேவையுள்ள நிலங்களுக்கு அந்தந்த பகுதி குளங்களில் தண்ணீா்இருப்பு உள்ளதால், அணையிலிருத்து தற்போது வெளியேற்றப்படும் 1311 கன அடி நீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,முதல் போக அறுவடைப் பணிகள் துவங்கிய நிலையில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவை தற்காலிகமாக குறைக்க வேண்டும். நீா் வரத்து குறைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீா் வைகை அணைக்கு செல்கிறது. ஆனால், வைகை அணையில் 60 அடி அளவிற்கு நீா் மட்டம் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீா் பிடிப்பு பகுதியிலும் பருவமழை குறைவால் நீா் வரத்து குறைந்து விட்டது.
எனவே, முதல் போக அறுவடைப் பணிகள் நடைபெறும் நிலையில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவை குறைத்தால் , தொடா்ந்து 2 ஆம் போக நெற்பயிா் சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது.குடிநீா் பிரச்சனையும் நீங்கும்.
ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீா் வரத்து குறைந்த நிலையிலும் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க வில்லை என்றால், இந்தாண்டும் 2 ஆம் போக கேள்விக்குறியாகவிடும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...