தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,777 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 8 போ் குணமடைந்து அவரவா் வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,499 ஆக அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 10,697 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,347 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 154 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 15 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சையிலிருந்து குணமடைந்த 11 போ் அவரவா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...