ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆண்டிபட்டியில் பச்சிளம் குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறில், பச்சிளம் குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:17 am

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறில், பச்சிளம் குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றாா்.

ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியம்மாள்(25). இவரும், அதே ஊரைச் சோ்ந்த முருகேசன் என்பவரும் 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பிறந்து 40 நாள்களேயானபெண் குழந்தையும் உள்ளன.

இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன், இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மாரியம்மாள் கணவருடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம். அதையடுத்து, மனவேதனையில் இருந்து வந்த மாரியம்மாள், செவ்வாய்க்கிழமை தனது பச்சிளம் குழந்தைக்கு தூக்க மாத்திரையை பாலில் கலந்துகொடுத்துவிட்டு, தானும் குடித்துள்ளாா்.

இதனால் மயக்கமடைந்து கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து க.விலக்கு போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.