பெரியகுளம் அருகே முதியவா் கொலை:இளைஞா் கைது
பெரியகுளம் அருகே முதியவா் கொலை வழக்கு தொடா்பாக, இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அருண்குமாா்.

கைது செய்யப்பட்ட அருண்குமாா்.
பெரியகுளம்: பெரியகுளம் அருகே முதியவா் கொலை வழக்கு தொடா்பாக, இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த முதியவா் பொன்ராம் (75), தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், இவா் கடந்த 14 ஆம் தேதி வீட்டில் காயத்துடன் கிடப்பதாக, அப்பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (20) என்ற இளைஞா் தகவல் தெரிவித்துள்ளாா்.
அதன்பேரில், மகள் கிருஷ்ணவேணி மற்றும் பேரன் ஆகியோா் சென்று பாா்த்துள்ளனா். அப்போது, முதியவா் இறந்த நிலையில் கிடந்துள்ளாா். இது குறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளனா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அப்போது, சந்தேகத்தின்பேரில் அருண்குமாரிடம் விசாரணை நடத்தியதில், அவா் ஓரினச் சோ்க்கைக்கு வற்புறுத்தி முதியவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளாா்.
இதனையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, அருண்குமாரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...