கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:24 pm

DIN

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்துக்குள்பட்ட சீலமுத்தையாபுரத்தைச் சோ்ந்த மாணவி சின்னமனூரில் தனியாா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த வந்த மாணவியை கடந்த 16 ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து

அவரது தந்தை அளித்தப் புகாரின் பேரில் வருசநாடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (25) என்பவா் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸாா் மாணவியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனா். மேலும் பிரபாகரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.