கம்பத்தில் இருந்து கேரளத்துக்கு காரில் கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்
கம்பத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்திச் சென்ற ரூபாய் 50 லட்சத்தை குமுளி காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஹவாலா பணமா என்று விசாரணை செய்து வருகின்றனர்.


கம்பத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்திச் சென்ற ரூபாய் 50 லட்சத்தை குமுளி காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஹவாலா பணமா என்று விசாரணை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து சொகுசு கார் ஒன்று குமுளி வழியாக கேரளாவுக்கு டிச.20ல் சென்றது. தமிழக-கேரளா எல்லையில் உள்ள கேரள சுங்கத்துறையினர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த பையில் 500 ரூபாய் கட்டுகளாக ரூபாய் 50 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி சுங்கத்துறையினர் பணம் கொண்டு வந்த நபரை விசாரித்தனர்.
விசாரணையில் கம்பம் என். கே.பி.ஆர். தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் ராஜீவ் (40) என்பது தெரியவந்தது. மேலும், 50 லட்ச ரூபாய் பணம் எப்படி வந்தது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்று கேட்டதற்கு மழுப்பலாக பதில் கூறினார். உடனே குமுளி சுங்கத்துறையினர், ராஜீவ், அவர் கொண்டு வந்த பணத்தையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் குமுளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குமுளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பணம் ஹவாலா பணமா என்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...