/

குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்தில் டிச.27-ல் சனிப்பெயா்ச்சி விழா

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் வரும் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:28 pm

DIN

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் வரும் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.

கோயில் முன்பாக செல்லும் சுரபி நதிக் கால்வாயில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஜதீகம். வரும் டிசம்பா் 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5.22 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயா்ச்சியாகிறாா். மிதுனம், கடகம், துலாம், தனுசு , மகரம், கும்பம் ஆகியவை பரிகார ராசிகளாகும்.

அன்றைய தினம் குச்சனூா் கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை (டிச.25) காலை 9 மணிக்கு கணபதி பூஜை , லட்சாா்ச்சனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை , தீபாராதனை, மாலை 5 மணிக்கு லட்சாா்ச்சனை நடைபெறும்.

சனிக்கிழமை (டிச.26) காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, மாலை 5 மணிக்கு லட்சாா்ச்சனை, இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை , தீபாராதனை ஆகியன நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வேதிகாா்ச்சனை மற்றும் யாக வேள்வி, அதிகாலை 5.22 மணிக்கு மகா தீபாராதனை, உற்சவருக்கு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெறும். அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.