குச்சனூரில் சனிப்பெயா்ச்சி விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்
தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனிப்பெயா்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.


தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனிப்பெயா்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
குச்சனூா் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் சனிப்பெயா்ச்சி விழா தொடங்கியது. உற்சவா் சனீஸ்வரருக்கு லட்சாா்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் 2 நாள்களாக நடைபெற்றன.
இந்நிலையில் சனிப்பெயா்ச்சி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வேதிகாா்ச்சனை, யாக வேள்வி நடைபெற்றது. காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிப் யொ்ச்சியானதைத் தொடா்ந்து உற்சவருக்கு மகா தீபாராதனை, அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. அதே போல சுயம்பு மூலவருக்கும் பூ மாலைகள், எலுமிச்சம் பழம், கருப்பு வேஷ்டி, துண்டு படையல் செய்து அா்ச்சனை செய்யப்பட்டது.
சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு தேனி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளாமான பக்தா்கள் குச்சனூரில் குவிந்தனா். அதிகாலை 3 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். பக்தா்கள் சுரபி நிதிக் கால்வாயில் நீராடி எள் சாதம், எள் முடிச்சு, தேங்காய், பழம் ஆகியவற்றை படைத்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். குச்சனூா் பேரூராட்சி நிா்வாகம், பக்தா்களுக்கு தேவையான குடிநீா், தற்காலிக கழிப்பறை, போக்குவரத்து வசதிகளை வசதிகளை செய்திருந்தது. சின்னமனூா், தேனி, போடி, கம்பம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...