சின்னமனூா் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
சின்னமனூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவி உடலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சின்னமனூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவி உடலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சீலையம்பட்டி அம்பேத்கா் காலனியை சோ்ந்த பாண்டி மகள் முத்துச்செல்வி (20). ஆண்டிபட்டி தனியாா் கல்லூரியில் முதுகலை பொறியியல் முதலாமாண்டு படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக உடல் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டின் பின்பகுதியில் முத்துச்செல்வி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற உறவினா்கள் முத்துச்செல்வியை மீட்டு, சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அப்போது, பரிசோதனை மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...