தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள காவல் துறை வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கூடுதல் பம்பா்களை போலீஸாா் திங்கள்கிழமை அகற்றினா்.
நான்கு சக்கர வாகனங்களில் கூடுதலாக பொருத்தப்பட்ட பம்பா்களால் அந்த வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் போது உயிா் காக்கும் கருவி வேலை செய்யாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்த பொதுநல வழக்கில் உயா்நீதிமன்றம் வரும் ஜன. 1 ஆம் தேதிக்குள் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பா்களை அகற்ற வேண்டும்
எனவும், அகற்றாதவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாா் வாகனங்களில் உள்ள பம்பா்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா் மற்றும் ஆய்வாளா்கள் பயன்படுத்தும் 5 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்கள் அகற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.