தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து நெரிசல்: கூடுதல் போலீசாரை நியமிக்க கோரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையான கம்பம்மெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் கூடுதலாக காவலர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லை.
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லையான கம்பம்மெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் கூடுதலாக காவலர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்வதற்கு கம்பம்மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய மலைச்சாலைகள் உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் திண்டுக்கல் குமுளிக்கு இடையே தேனி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த டிசம்பர். 24-ல் கம்பத்தில் இருந்து குமுளி வழியாக கேரம் செல்லும் மலைச்சாலையில் மூடப்பட்டது. 

மாற்று ஏற்பாடாக கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு மலைச்சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கம்பம்மெட்டு மலைச்சாலையில் வழக்கத்தைவிட அதிகமாக தோட்டத் தொழிலாளர்களை செல்லும் வாகனங்கள், சரக்கு, கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் அதிகமாக கேரளப் பகுதியில் இருந்து தமிழக பகுதிக்கும் தமிழகத்தில் இருந்து கேரள பகுதிக்கும் செல்கின்றது.

இதனால் கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் இருந்து மலைச்சாலை கொண்டை ஊசி வளைவுகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்பட்டு பயணம் தடைபடுகிறது. காவல்துறையினர் மலைச் சாலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் பாதுகாப்புச் செய்து, செல்கின்ற வாகனங்களை முறைப்படுத்தி அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதற்கு கூடுதல் காவலர்களை மலைப்பாதையில் நியமிக்க மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com