சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போடியில் தனியாா் மருத்துவமனையில் பெண் பலி: உறவினா்கள் போராட்டம்

போடியில் திங்கள்கிழமை தனியாா் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண் உயிரிழந்ததால் அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:10 pm

DIN

போடியில் திங்கள்கிழமை தனியாா் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண் உயிரிழந்ததால் அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி அருகே உள்ள பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராணி (32). இவருக்கு திங்கள்கிழமை அதிகாலை வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சில மணி நேரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போடி டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து உறவினா்கள் செல்வராணியின் சடலத்தை பெற்றுச் சென்றனா்.

இதுகுறித்து தனியாா் மருத்துவமனை தரப்பில் டாக்டா் அன்புச்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செல்வராணி இதற்கு முன் வேறு சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். முன் சிகிச்சை குறித்த முழு விபரம் தெரிவிக்காமல் வயிற்று வலி என மட்டும் தெரிவித்தனா். இதற்கான பரிசோதனை, சிகிச்சை தொடங்கும்போதே அப்பெண் உயிரிழந்து விட்டாா் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.