தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கம்பம் மெட்டு சோதனை சாவடியில் சாலை அமைக்க கேரள காவல்துறையினர் எதிர்ப்பு

தமிழக கேரள எல்லை கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் வெள்ளிக்கிழமை தார்ச்சாலை அமைக்க கேரள காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :24 ஜூலை 2020, 1:12 pm

DIN

தமிழக கேரள எல்லை கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் வெள்ளிக்கிழமை தார்ச்சாலை அமைக்க கேரள காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கம்பம் மெட்டு தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ளது.

 தற்போது  கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு மலைச்சாலையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 12 ஆவது கிலோ மீட்டர்  வரை புதிய தார்சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.

 வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலை துறையினர் கம்பம்மெட்டு வனத்துறை மற்றும் காவல்துறை சோதனைச் சாவடி அருகே தார்ச்சாலை அமைத்தனர். 

அதன் அருகே உள்ள கேரள மாநில கம்பம்மெட்டு காவல்நிலைய போலீசார் இந்த பகுதியில் தார்சாலை அமைக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 இதற்கு தமிழக காவல் மற்றும் வனத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும்  நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் உதயகுமார், எங்களது எல்லைவரை தார்ச்சாலை அமைக்கிறோம் அதற்கு இடையில் ஆக்கிரமிப்பு இடங்களையும் அகற்றுவோம் என்று கூறி வாக்குவாதம் செய்தார். 

எதிர்ப்பு தெரிவித்த கம்பம்மெட்டு போலீசார் பின்னர் திரும்பிச் சென்றனர்.

வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடி தடுப்பு கம்பிகள்  வரை தமிழக மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைத்தனர்.

இந்த சம்பவம்  இரு மாநில எல்லைப்பகுதி அரசு ஊழியர்களிடையே நடந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.