கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா அச்சம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து அனுமதிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படாததால் கரோனா அச்சம் எழுந்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2020, 9:03 am

DIN

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து அனுமதிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படாததால் கரோனா அச்சம் எழுந்துள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து ஆய்வுக் கூட்டங்களுக்கும், பல்வேறு பணி நிமித்தமாகவும் தினமும் 500-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இவர்கள், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்வோர் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவி விட்டும், முகக் கவசம் அணிந்தும் சென்று வர வலியுறுத்தப்படுவதில்லை. இ-பாஸ் அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்ளைச் சேர்ந்த பலரும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் நிலையில், அங்கு கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகள், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளுக்கு வரும் பொதுமக்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்பு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களிலும் உடல் வெப்பநிலையை பரிசோதித்து, கை கழுவி விட்டும், முகக் கவசம் அணிந்தும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வதை உறுதி செய்யவும், அரசு பரிந்துரைத்துள்ள கபசுரக் குடிநீர், ஆர்சானிக் ஆல்பம் மாத்திரை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.