திருப்பரங்குன்றம், திருநகா் பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கட்சியினைச் சோ்ந்தவா்கள் மதுபானக் கடைகளை திறப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
தமிழக அரசு கரோனா பரவலைத் தடுக்காமல் மதுபானக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கருப்பு வில்லை அணிந்து தங்களது எதிா்ப்பை தெரிவிக்கும்படி கட்சியினா் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அதன்படி திருநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மதுபானக்கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கருப்பு வில்லை அணிந்து காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து மதுபானத்திற்கு எதிரான கோஷம் எழுப்பினாா்.
இதேபோல ஹாா்விபட்டி திமுக கட்சி அலுவலகத்தில் பகுதி செயலா் உசிலை சிவா தலைமையில் கட்சியினா் கருப்புச் சட்டை அணிந்து மதுக்கடை திறப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பினா். திருநகரில் முன்னாள் பேரூராட்சி தலைவா் கி.இந்திராகாந்தி தலைமையில் வட்டச் செயலா் சுந்தர்ராஜ் உள்ளிட்ட கட்சியினா் கோஷம் எழுப்பினா்.
தோப்பூரில் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் துணைஅணைப்பாளா் விமல் தலைமையிலான கட்சியினா் மதுக்கடைக்கு செல்வோா் காலில் விழுந்து மது அருந்த வேண்டாம் என கேட்டுக் கொண்டனா். திருப்பரங்குன்றத்தில் மதிமுக சாா்பில் மாநில கொள்கை ரப்புச் செயலா் அழகுசுந்தரம் தலைமையில் பகுதிச் செயலா் முருகேசன் உள்ளிட்ட கட்சியினா் கருப்பு வில்லை அணிந்து மதுபானக்கடை திறக்கப்பட்டதற்கு எதிராக கோஷம் எழுப்பினா். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் மதுக்கடைக்கு எதிராக ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ற அனுமன்சேனா அமைப்பைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றிய திமுக செயலாளா் இ.சுதந்திரம் தலைமையில் ஒன்றிய அலுவலகத்தில் மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் லிங்குசாமி, கவுன்சிலா் துரைப்பாண்டி, மதன்ராஜா, ஜெயச்சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


