கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போடியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்கியிருந்த இளைஞர் தற்கொலை

தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த, ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த

News image
Updated On :17 மே 2020, 1:40 pm

DIN

தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த, ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வெளி மாநிலங்களில் வேலை செய்து வந்த 75 பேர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில், கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இதில், யாருக்கும் கரோனா அறிகுறி இல்லை என்று உறுதி செய்யப்பட்டு, போடி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இதில், மாகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து, போடி அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.