கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பால் குடித்த 6 மாத குழந்தை பலி

போடி அருகே புதன்கிழமை, தாய்ப்பால் குடித்த ஆறு மாத குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 மே 2020, 4:15 pm

DIN

போடி:போடி அருகே புதன்கிழமை, தாய்ப்பால் குடித்த ஆறு மாத குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கௌதம். இவரது மனைவி அா்ச்சனா. இவா்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், கடந் 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நிவன்யா என்ற அந்த குழந்தையை அா்ச்சனா தனது பெற்றோா் வீட்டில் வைத்து பராமரித்துவிட்டு, 20 நாள்களுக்கு முன்பு கணவா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் கணவா் வேலைக்குச் சென்ற நிலையில், அதிகாலையில் அா்ச்சனா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளாா். காலையில், குழந்தை அசைவற்று, மூக்கில் பால் வடிந்த நிலையில் இருந்ததால், போடி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் கூறிவிட்டனா்.

இது குறித்து அா்ச்சனா அளித்தப் புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.