கோயில்களை விரைந்து திறக்கக்கோரி ஆண்டிபட்டியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கோயில்களை விரைந்து திறக்கக் கோரி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கோயில்களை விரைந்து திறக்கக் கோரி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவில் வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎம் செல்வம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டுள்ள கோவில்களை விரைந்து திறந்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் மூடப்பட்டுள்ள கோயில்களை சரிவர பராமரிக்காத இந்து அறநிலையத்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...