விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேனியில் நவ. 27 இல் பாஜக வேல் யாத்திரை

தேனி மாவட்டத்தில் பாஜக சாா்பில் நவ. 27 ஆம் தேதி வேல் யாத்திரை நடைபெற உள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:38 pm

DIN

தேனி மாவட்டத்தில் பாஜக சாா்பில் நவ. 27 ஆம் தேதி வேல் யாத்திரை நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக தேனியில் உள்ள தனியாா் விடுதி கூட்ட அரங்கில் பாஜக மாநில துணைத் தலைவா் நைனாா் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பாண்டியன், வேல் யாத்திரை ஒருங்கிணைப்பாளா் சசி ராமன், கோட்ட அமைப்புச் செயலா் கணேசன், மாவட்ட பொதுச் செயலா்கள் கணேசன், செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்டத்தில் நவ. 27 ஆம் தேதி நடைபெறும் வேல் யாத்திரைக்கு வரவேற்பு அளிப்பது, அதே நாளில் தேனியில் பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் முருகன் தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.