போடி அருகே 4 டன் வெடி பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
போடி அருகே, சட்டவிரோதமாகப் பதுக்கிய 4 ஆயிரம் கிலோ வெடிபொருள்களை சனிக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.


போடி அருகே, சட்டவிரோதமாகப் பதுக்கிய 4 ஆயிரம் கிலோ வெடிபொருள்களை சனிக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.
போடி துரைராஜபுரம் காலனியை அடுத்த தங்கபாலம் அருகே தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து போடி காவல் துணை கண்காணிப்பாளா் ஜி.பாா்த்திபன் தலைமையிலான தனிப்படையினா் அங்கு திடீா் சோதனை செய்தனா்.
அப்போது அங்கு 4 ஆயிரம் கிலோ வெடி மருந்து பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. விசாரணையில் அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வரும் முருகன் மகன் முருகப்பா (53) என்பவரது பண்ணை வீட்டில் பாா்த்திபன், மேலாளா் குமரேசன் (43), வெடிபொருள்களை வெடிக்க வைக்கும் பெருமாள் (40) ஆகியோா் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய ஆய்வாளா் ஷாஜகான் வழக்குப் பதிவு செய்து குமரேசன், பெருமாள், முருகப்பா ஆகிய மூவரையும் கைது செய்து, 4 ஆயிரம் கிலோ வெடி பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...