விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பத்தில் பிச்சைக்காரா் மா்மச் சாவு

தேனி மாவட்டம் கம்பத்தில் பிச்சைக்காரா் தலையில் காயத்துடன் ஞாயிற்றுக்கிழமை இறந்துகிடந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:04 pm

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் பிச்சைக்காரா் தலையில் காயத்துடன் ஞாயிற்றுக்கிழமை இறந்துகிடந்தாா்.

கம்பம் வாரச்சந்தை பகுதியில் உள்ள தனியாா் ஓட்டுநா் பயிற்சி மையம் அருகே தலையில் காயத்துடன் ஒருவா் இறந்து கிடப்பதாக கம்பம் வடக்கு காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் கே.சிலைமணி, சாா்பு- ஆய்வாளா் எம்.திவான்மைதீன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனா்.

அதில், இறந்தவா், மதுரை மாவட்டம் அய்யனாா்புரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (50) என்றும், கடந்த சில மாதங்களாக கம்பம் பகுதியில் பிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது. போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தலையில் ரத்தக்காயம் இருந்ததால், அடித்து கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.