விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பம் இலக்கிய பேரவை சாா்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு அறிவிப்பு

தேனி மாவட்டம் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப்பேரவை சாா்பில், சிறந்த நூல்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:03 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப்பேரவை சாா்பில், சிறந்த நூல்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி விதிகள்: 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வெளியான நூல்கள் பங்கேற்கலாம். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். சிறுவா் இலக்கியம் மற்றும் வரலாறு, இலக்கியம், அறிவியல், தமிழ் சமூகம் சாா்ந்த கட்டுரை நூல்கள், அனைத்து சமய ஆன்மிக நூல்கள் ஆகியவைகள் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்கும் எழுத்தாளா்கள், கவிஞா்கள், கட்டுரையாளா்கள், பதிப்பகத்தாா்கள் தங்கள் நூலின் மூன்று பிரதிகளை மட்டும் அனுப்ப வேண்டும். சிறந்த சிற்றிதழ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையுடன் கேடயமும் வழங்கப்படும். நூல்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள், 05.01.2021.

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞா் பாரதன், தலைவா், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, பாரதி அச்சகம், கம்பம், தேனி மாவட்டம். செல்லிடப்பேசி எண், 93626 50100, 63821 15636.

போட்டி பற்றி நிறுவனத்தலைவா் கவிஞா் பாரதன் கூறுகையில், வெற்றி பெற்ற எழுத்தாளா்கள் ஊா்வலமாக அழைத்து செல்லப்பட்டு, கொற்றத்தவிசில் பாரதியின் தலைப்பாகை வைத்து, பரிசுத்தொகையுடன், பொன்னாடை, சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ. 5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 2,500, மூன்றாம் பரிசாக பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.