ஆண்டிபட்டியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் .


திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் .
முருகன் திரையரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் மறவபட்டி மகாராஜன் தலைமை வகித்தாா்.
முன்னாள் பேரூா் செயலாளா் காந்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின் போது திருக்குவளை மற்றும் நாகை மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ததைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா் தங்கம், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளா் போஜன், முன்னாள் பேரூா் துணைச் செயலாளா் வீரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்கம் உள்பட ஏராளமான நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...