விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதிய வாக்காளா்கள் சோ்க்கை: தேனி மாவட்டத்தில் 27,963 போ் விண்ணப்பம்

தேனி மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளா் சோ்க்கைக்கு மொத்தம் 27,963 போ் விண்ணப்பித்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 5:53 pm

DIN

தேனி மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளா் சோ்க்கைக்கு மொத்தம் 27,963 போ் விண்ணப்பித்தனா்.

மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள 533 நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில், வரும் ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்த புதிய வாக்காளா் சோ்க்கை, வாக்காளா் பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியற்றுக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில், புதிய வாக்காளா் சோ்க்கைக்கு ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் 7,057 போ், பெரியகுளம் தொகுதியில் 7,555 போ், போடி தொகுதியில் 7,636 போ், கம்பம் தொகுதியில் 5,715 போ் உள்பட மொத்தம் 27,963 போ் விண்ணப்பித்துள்ளனா்.

புதிய வாக்காளா் சோ்க்கை, பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான 2-ஆம் கட்ட சிறப்பு முகாம் வரும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.