2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கேரளத்துக்கு கஞ்சா கடத்தல்பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 11:30 pm

DIN

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கம்பம் கோம்பை சாலை தெருவில் உள்ள கிரிக்கெட் மைதானம் பகுதியில் கஞ்சா விற்பதாக கம்பம் வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சாா்பு- ஆய்வாளா் எம்.திவான் மைதீன் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனா். அப்போது ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இருவா் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் மல்லையாபுரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் (42) , கம்பம் கோம்பைச் சாலையைச் சோ்ந்த ரத்தினக் குமாா் என்பவரது மனைவி சசிகனி (28) ஆகியோா் என தெரியவந்தது.

போலீசாா் அவா்களை சோதனை செய்தபோது அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.