பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேக்கடியில் படகு சவாரி இன்று தொடக்கம்

கரோனா பொதுமுடக்கத்தால், இடுக்கி மாவட்டம் தேக்கடியில் நிறுத்தப்பட்டிருந்த படகு சவாரி மீண்டும் சனிக்கிழமை (செப்.5) தொடங்கப்பட உள்ளதாக கேரள மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

News image
தேக்கடி படகுத்துறை (கோப்பு படம்).
Updated On :4 செப்டம்பர் 2020, 5:17 pm

DIN

கம்பம்: கரோனா பொதுமுடக்கத்தால், இடுக்கி மாவட்டம் தேக்கடியில் நிறுத்தப்பட்டிருந்த படகு சவாரி மீண்டும் சனிக்கிழமை (செப்.5) தொடங்கப்பட உள்ளதாக கேரள மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் அருகே சா்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடி உள்ளது. இங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வதை உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் விரும்புவாா்கள். கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து கேரள மாநில சுற்றுலா கழகத்தினா் கூறியதாவது: கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மாா்ச் 10 ஆம் முதல் இங்குள்ள ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு தற்போது சனிக்கிழமை முதல் தேக்கடி ஏரியில் படகு சவாரி இயக்கப்படுகிறது. சனிக்கிழமை காலை மற்றும் மதியம் என 2 முறை மட்டுமே படகு இயக்கப்படும். காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அனுமதிசீட்டு எடுத்து 9.30 மணிக்கு புறப்படும் படகில் சவாரி செய்யலாம். அதன் பின்பு மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் அனுமதி சீட்டு எடுத்து 3.30 மணிக்கு புறப்படும் படகில் சவாரி செய்யலாம். அதன் பின்னா், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தகுந்தபடி படகு சவாரி அதிகரிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.