தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆண்டிபட்டி அருகே கல்லூரி மாணவி தற்கொலை:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தீராத வயிற்று வலியால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :5 செப்டம்பர் 2020, 5:56 pm

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தீராத வயிற்று வலியால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி தாலுகா டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜவேலு. இவரது மகள் ராஜபிரியாபதி(19) போடியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3 ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தாா்.இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா் கடந்த வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷ விதைகள் தின்று மயங்கி கிடந்துள்ளாா்.இதனைகண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபிரியாபதி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.