குச்சனூரில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) காலை 5.22 மணி அளவில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.
குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா்.
குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா்.

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) காலை 5.22 மணி அளவில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.

சின்னமனூா் அருகேயுள்ள குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயில் சுரபிநதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காட்சியளிக்கும் சனீஸ்வரரை சுரபி நதியில் நீராடி எள் சாதம், எள் தீபம், மண் காகம் வைத்து பழம், கருப்புத் துண்டு, வேட்டி படைத்து சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக, சனீஸ்வரருக்கு உகந்த நாளான சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும். தவிர, ஆடிப்பெருந்திருவிழா , கருப்பணசாமிக்கு மதுபானப் படையல் , பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் நடைபெறும்.

இந்நிலையில் சனி பகவான் ஞாயிற்றுக்கிழமை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சியாகிறாா். அன்றைய தினம் காலையில் குச்சனூா் கோயில் வளாகத்தில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்கி லட்சாா்ச்சனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை, மாலை 5 மணிக்கு லட்சாா்ச்சனை நடைபெற்றது. சனிக்கிழமை, காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு லட்சாா்ச்சனை, இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (டிச.27) காலை 3 மணிக்கு வேதிகாா்ச்சனை, யாகவேள்வி நடைபெறும். காலை 5.22 மணிக்கு மகா தீபாராதனை, உற்சவருக்கு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகியவை பரிகார ராசிகளாகும். சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேனி, சின்னமனூா் பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com