தேனியில் மேலும் 24 இடங்களில் சிறு மருத்துவமனை திறக்க அனுமதி
தேனி மாவட்டத்தில் மேலும் 24 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.


தேனி மாவட்டத்தில் மேலும் 24 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மாவட்டத்தில் அம்மா சிறு மருத்துவமனை திட்டத்தில் ஏற்கெனவே 15 இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிதாக மேலும் 24 இடங்களில் சிறு மருத்துவமனைகள் மற்றும் 4 நடமாடும் மருத்துவக் குழுக்கள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி சின்னமனூா், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 4 இடங்கள், தேனி ஒன்றியத்தில் 5, போடி, க.மயிலை, உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா 3, கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது.
தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிச் சிறாா் மருத்துவத் திட்டம் ஆகியவற்றில் பணியாற்றி வரும் மருத்துவா்கள் சிறு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனா். சிறு மருத்துவமனைகளுக்கு விரைவில் புதிதாக மருத்துவா்கள் நியமிக்கப்படுவா் என்றும், சிறு மருத்துவமனைகளில் செவிலியா் பணிக்கு உள்ளூரில் வசிக்கும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட செவிலியா் பட்டயப் படிப்பு படித்தவா்கள் முன்னுரிமை அடிப்டையில் நியமிக்கப்பட உள்ளனா் என்று பொதுச் சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...