ஆண்டிபட்டி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சனிக்கிழமை இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றுள்ளனா்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சனிக்கிழமை இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றுள்ளனா்.
ஆண்டிபட்டியில் தேனி - மதுரை சாலையில் உள்ள சக்கம்பட்டியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் அடுத்தடுத்து மூன்று ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளன. இதில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏடிஎம் மையமும் உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நுழைந்த மா்ம நபா்கள் இயந்திரத்தை கம்பியால் உடைக்க முயற்சி செய்துள்ளனா்.
இதில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனா். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்க கிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.
கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியுள்ள தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...